ஹாலோவீன் கொண்டாட்டத்தில் நெரிசல்: தென்கொரியாவில் 150 பேர் பலி : 70 காயம்,

26

சியோல்: தென் கொரிய நாட்டில் நடைபெற்ற ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 150 பேர் உயிரிழந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . அதில் சிக்கிய சிலருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல். சுமார் 150 பேர் இந்த நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதாவோன் (Itaewon) பகுதியில் சுமார் 1 லட்சம் பேர் ஹாலோவீன் கொண்டாடத்திற்காக வந்துள்ளனர். அங்கு கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தளர்த்தப்பட்ட காரணத்தால் பெரிய அளவிலான மக்கள் திரண்டிருந்தனர். அப்போது தான் இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அந்த பகுதியில் அமைந்துள்ள உணவு கூடத்தில் பிரபலம் ஒருவர் வந்ததாக தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து அவரை பார்க்கும் நோக்கில் அங்கு திரண்டிருந்த மக்கள் குறுகலான தெரு ஒன்றில் செல்ல முயன்றுள்ளனர். அப்போது தான் நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதில் சிக்கிய மக்களில் சுமார் 150 பேர் உயிரிழந்துள்ளதாக தென் கொரிய நாட்டை சேர்ந்த அதிகாரிகளின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாரடைப்புக்கு ஆளான சுமார் 50 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது.

இந்த சம்பவம் ஹாமில்டன் ஹோட்டலுக்கு அருகே நடந்துள்ளது. காயம்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் 400 பேர் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. களத்திற்கு 140 வாகனங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும் தெரிகிறது.

Join Our WhatsApp Group