வயலுக்குள் புகுந்த கோழிகளுக்கு விஷம் வைப்பு : 35 கோழிகள் உயிரிழப்பு

27
  • ஆணைக்கோட்டை பகுதியில் சம்பவம்

( நமது பருத்தித்துறை நிருபர் )

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆணைக்கோட்டை பகுதியில் தனது வயலிற்குள் புகுந்த கோழிகளுக்கு சோற்றில் விசம் வைத்த நிலையில் 35கோழிகள்  உயிரிழந்துள்ளதாக கோழி உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது. மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆணைக்கோட்டை பகுதியில் உள்ள வயல் நிலமொன்றிற்குள் அப்பகுதியைச் சேர்ந்த மூன்று கோழி உரிமையாளர்களின் 35கோழிகள் உட்புகுந்த நிலையில் குறித்த கோழிகளுக்கு சோற்றில் விசம் வைத்து கோழிகள் இறந்துள்ளதாக குறித்த கோழிகளின் உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் ஆணைக்கோட்டை வயல்நிலபகுதியில் ஆங்காங்கே கோழிகள் இறந்த நிலையில் இறந்து கிடப்பதை காணமுடிந்தது.

குறித்த வயல் நில உரிமையாளரின் எல்லை வேலிகள் பிரதேச வாசிகளால் தீயிடப்பட்ட நிலையில் குறித்த நபர் மானிப்பாய் பிரதேச சபையில் ஊழியராக பணிபுரிகின்றார் என அறியமுடிகிறது.

Join Our WhatsApp Group