யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியில் கடல் அட்டை பிடித்த ஏழு பேர் கைது

0
35

யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் கடலட்டை பிடித்த ஏழு பேரும் தங்கூசி வலையைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்ட ஒருவரையும் நீதிமன்றில் முற்படுத்த கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடற்படையினர் மற்றும் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களமும் இணைந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கையில் கடலட்டை பிடித்து வந்த ஏழு பேர் கடலட்டையுடன் இனங்காணப்பட்டதுடன்,

தங்கூசி வலையைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்ட ஒருவர் இனங்காணப்பட்டு அவரது படகும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடற்கரையோரமாக இருந்த தங்கூசி வலையும் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டது.

குறித்த எட்டுப்பேரையும் எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் முற்படுத்த கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்