யக்கல மல்வத்த ஹிரிப்பிட்டிய பகுதியில் நாடாளுமன்றத்திற்கு சொந்தமான பஸ் மோதியதில் பொலிஸ் சார்ஜன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குறித்த விபத்தை ஏற்படுத்திய நாடாளுமன்றத்திற்கு சொந்தமான பஸ்ஸின் சாரதி தப்பிச் சென்றுள்ளதாக மல்வத்த ஹிரிப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
ஜா – எல பகுதியில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வை முடித்துக் கொண்டு அதில் பங்கேற்றவர்களை வீடுகளுக்கு அழைத்துச் சென்ற போதே குறித்த விபத்து சம்பவித்துள்ளது. இந்நிலையில் குறித்த விபத்தை ஏற்படுத்திய பஸ்ஸின் சாரதி பொல்கஹாவெல பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
(நன்றி – தமிழன் )