இந்தியா – இஸ்ரேல் இலங்கையில் கூட்டு விவசாய செயல் திட்டம்

0
31

இலங்கையில் விவசாயத்துறையில் இஸ்ரேலும் இந்தியாவும் கூட்டு செயல் திட்டத்தில் ஈடுபட இருக்கின்றன. இதற்கான ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் விவசாய திட்டங்களுக்கு இஸ்ரேல் தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் அதே நேரம், இந்தியா நிதி உதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக விவசாய அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தக் கூட்டு விவசாய திட்டங்களுக்கு இலங்கையில் ஐந்து இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. ஹொரண, சீதா எளிய, மகா இலுப்ப பள்ளம, அங்குணுகொலபலச , கண்ணொருவ ஆகிய இடங்களிலேயே ஆரம்பக் கட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன. இஸ்ரேலுடனான பேச்சு வார்த்தைகளை டெல்லியில் உள்ள தூதரகத்தோடு நேரடியாக நடத்துமாறு,இலங்கைக்கான தூதுவர் மிலிந்த மொறக்கொடவுக்கு விவசாய அமைச்சு பணித்துள்ளது.
அதேநேரம், இலங்கையில் இந்திய உயர் ஸ்தானிகரோடு பேச்சு வார்த்தைகள் நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் விவசாய அமைச்சு செய்துள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பார்க்லே , இஸ்ரேலிய தூதுவரோடு நேரடி பேச்சு வார்த்தைகளை நடத்தி இந்தக் கூட்டு செயல் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக விவசாய அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, இலங்கையில் தோட்டக்கலை சம்பந்தமான ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றினை நிறுவுவதற்கும் இரு நாடுகளிடமும் உதவிகள் பெற இருப்பதாக விவசாய அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்