மொட்டுக் கட்சியின் அழுத்தங்களால் ஜனாதிபதி சுயமாக செயல்பட முடியவில்லை- மைத்திரி

15

எதிர்வரும் தேர்தலில் பரந்த கூட்டணியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அகில இலங்கை மகளிர் சங்கம் மற்றும் அகில இலங்கை இளைஞர் சங்கம் ஆகியவற்றின் பொதுச் சபைக் கூட்டங்களின் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு பிடிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், தற்போதைய ஜனாதிபதி, பொதுஜன பெரமுன கட்சியின் அழுத்தங்களுக்கு உள்ளாகி, சரியாகச் செயற்பட முடியாத நிலையில் உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.

Join Our WhatsApp Group