மேலைத்தேய முன்னாள் மனைவியர்
கோரிக்கைகளை சவூதி ஏற்குமா?

0
28

சவூதிஅரேபிய ஆண்களை திருமணம் முடித்த மேலைத்தேய மற்றும் அமெரிக்க முன்னாள் மனைவியர் கள்,தங்களது குழந்தைகளை சொந்த நாடுகளிலே வாழ விடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், சவூதிஅரேபிய வாரிசு உரிமைச் சட்டத்தில்,இதற்கான அனுமதிகள் இல்லாதுள்ளன.இரட்டைப் பிரஜா உரிமையும் சவூதியில் இல்லாததால், தங்களது பிள்ளைகளைக்கு சவூதி குடியுரிமை வழங்கவே தந்தையர்கள் விரும்புகின்றனர்.

புலமைக் கற்கைகள் மற்றும் தொழில் களுக்காக மேலைத்தேய நாடுகளுக் குச் செல்லும் சவூதியர்கள் சிலர், அந்த நாடுகளில் திருமணம் செய்கி ன்றனர்.இவ்வாறான திருமணங்கள் விவாகரத்தில் முடிந்தால்,குழந்தைக ளை தந்தையர்களே பொறுப்பேற்று மீளவும் சவூதிஅரேபியாவுக்கு அழைத் து வருவர்.

தாயைப்பிரிந்து குழந்தைகள் வாழ்வ தை விரும்பாத தந்தையர்கள்,முன்னா ள் மனைவியர்கள் விரும்பினால்,சவூ தியில் வேறாக வாழ்வதற்கான ஏற்பா டுகளையும் செய்வதுண்டு.இல்லை யாயின், குழந்தை,சவூதியிலே தந்தை யுடனே வாழ நேரிடுகிறது.இதை,மே லைத்தேய முன்னாள் மனைவியர்கள் விரும்பவில்லை.எவ்வாறாயினும்,தந்தையர்களின் தீர்மானத்துக்கே சட்ட அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்