மாத்தறை – திஹகொட பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் பாடசாலை மாணவர் ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மாத்தறை மாவட்டத்தின் மனித உரிமை ஆணைக்குழுவின் குழுவொன்று இன்று (29) குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று மாலை நடந்த இந்த சம்பவத்தில், படுகாயம் அடைந்த 15 வயதுடைய மாணவன் தீவிர சிகிச்சை பிரிவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். போலஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் பதட்டங்களை ஏற்பட்ட நிலையில் இந்த பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததனாலே இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.