பருப்பு, வெ.அரிசி உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் மேலும் குறைப்பு

19

** பண்டங்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவிப்பு

புறக்கோட்டை மொத்த சந்தையில் பருப்பு, வெள்ளை அரிசி உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் மேலும் குறைந்துள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன் 375 ரூபாவாக இருந்த ஒரு கிலோ பருப்பின் விலை 350 ரூபாவாக குறைந்துள்ளது. அத்துடன், 290 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் வெள்ளை அரிசியின் மொத்த விலை 225 ரூபாவாக குறைந்துள்ளதாக அத்தியாவசிய பண்ட இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை நேற்று 250 ரூபாவாக குறைந்துள்ளது.
கோதுமை மாவின் விலை பல தடவைகள் குறைக்கப்பட்ட போதிலும், வெதுப்பக உரிமையாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களின் விலையை இதுவரை குறைக்கவில்லை.

Join Our WhatsApp Group