ஜனாதிபதியை ஆதரிக்கிறேன்; ஐ.தே.கவின் முதுகில் ஏற மாட்டேன்- அமைச்சர் பிரசன்ன

0
11

‘நாட்டின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் எண்ணம் எனக்கு இல்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க இருந்தாலும் ஜனாதிபதி என்ற ரீதியில் அவரை நான் ஆதரிக்கின்றேன். அதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நான் விலகிவிட்டேன் என்று தவறாக அர்த்தம்கொள்ளக்கூடாது. யானையின் முதுகில் ஏறும் எண்ணம் எனக்கு இல்லை. ‘மொட்டு’வில் இருந்தே எனது அரசியல் பயணம் தொடரும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்