சாரதி அனுமதி பத்திர பணிகள்… :500,000 அட்டைகள் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி

12

சாரதி அனுமதிப் பத்திரம் அச்சடிக்கும் பணி அடுத்த வாரம் ஆரம்பிக்கப்ப்டும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அண்மைக் காலமாக பொருட்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக திணைக்களம் பெருமளவிலான சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுவதை இடைநிறுத்தி, குறைந்த எண்ணிக்கையிலான பத்திரங்களை மாத்திரமே வழங்கி வருகிறது.
தற்போது 600,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட உள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, சாரதி அனுமதிப் பத்திரம் அச்சடிக்கும் பணி அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படுமென தெரிவித்த அவர்,
அண்மைக் காலமாக பொருட்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக திணைக்களம் பெருமளவிலான சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுவதை இடைநிறுத்தி, குறைந்த எண்ணிக்கையிலான பத்திரங்களை மாத்திரமே வழங்கி வருகிறது என தெரிவித்தார்.

Join Our WhatsApp Group