22 இக்கு ஆதரவளித்தது ஏன்?

17

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் நாட்டில் நல்லாட்சி ஏற்படும் என்ற கருதுகோள் சர்வதேசத்துக்கு உள்ளதாகவும்,இதனால் குறுகிய அரசியல் வேறுபாடுகளை மறந்து நாட்டை மீள கட்டியெழுப்புவதற்காகவே 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு கட்சி வாக்களித்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அத்துடன்,முன்னாள் நிதியமைச்சர்,பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் பதவி விலகிய போதிலும்,மொட்டுவின் கட்டளையின் கூடிய அரசாங்கமே தற்போது இயங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

விவசாயிகளின் உரத்தையும்,மீனவர்களின் எரிபொருளையும் தடுத்து நிறுத்திய அதே எதேச்சதிகார அரசாங்கம் தான் மறைமுகமாக நாட்டை ஆள்கிறது எனவும் தெரிவித்தார்.

அதேபோல்,கர்ப்பிணித் தாய்மார்கள்,சிறு குழந்தைகளுக்கு திரிபோஷம் இல்லாத சந்தர்ப்பத்தில்,எந்த சூழ்நிலையிலும் எதிர்க்கட்சியாக அமைச்சுப் பதவியை ஏற்க மாட்டோம் எனவும்,எதிர்க்கட்சியில் இருந்த வண்ணம் நாட்டை கட்டியெழுப்பத் தேவையான உதவி ஒத்தாசைகளை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஹம்பந்தோட்டை நெதிகம்வில ரஜமஹா விகாரையின் தலைமை தேரரும்,அமரபுர சத்தம்மயுக்திக நிகாயவின் மாத்தறை பிரிவின் பதில் மகாநாயக்க தேரர், சங்கைக்குரிய உயன்வத்தை சத்தாராம தேரரை பார்வையிடும் நிமித்தம் கடந்த புதன்கிழமை (26) சென்றிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவரது துறவற வாழ்வின் 60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்படவுள்ள விழா குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது கவனம் செலுத்தினார்b.

வலையொளி இணைப்பு-

Join Our WhatsApp Group