12 வீதத்தால் குறைகிறது பஸ் கட்டணம்…

49
  • கொரோனா கால சட்டத்தை நீக்க கோருகிறது போக்குவரத்து அமைச்சு

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக, பஸ்களில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்லும் சட்டத்தை நீக்குவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. போக்குவரத்து அமைச்சு முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இந்தச் சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர், பேருந்து கட்டணங்கள் 10 வீதத்தால் குறைக்கப்பட்டது. இதையடுத்து, டீசல் லீற்றரின் விலை, 15 ரூபாவினால் குறைக்கப்பட்டது. இதன்போது, கருத்து வெளியிட்டிருந்த போக்குரவத்து அமைச்சர், ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய, பயணிகளை ஏற்றிச் செல்லும் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர், கட்டணத்தைக் குறைப்பதாக தெரிவித்தார்.

இதற்கமைய, குறித்த சட்டத்தை நீக்குமாறு, நான்கு சந்தர்ப்பங்களில் போக்குவரத்து அமைச்சு, சுகாதார அமைச்சிற்கு எழுத்துமூலம் அறியப்படுத்தி இருந்தது. இதற்கமைய, நடவடிக்கை எடுத்தால், 12 வீதத்தால், பேருந்து கட்டணத்தைக் குறைக்க முடியும் என போக்குவரத்து அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது

Join Our WhatsApp Group