யாழ் இளவாலையில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

0
46

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை சேந்தான்குளம் கடற்பரப்பில் உருக்குலைந்த நிலையில் இன்று காலை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உடலம் ஒன்று மிதப்பதை அவதானித்த பொதுமக்கள் இளவாலை பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த இளவாலை பொலிசார் விரைந்த நிலையில் சடலம் கடல் அலைமூலம் கரை ஒதுங்கியுள்ளது.

இதனையடுத்து நீதிவான் முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக இளவாலை பொலிசார் தெரிவித்தனர்.கடந்த ஆண்டிறுதியிலுப்  இவ்வாறு சடலங்கள் யாழ் மாவட்ட கடற்கரையோரத்தை சூழ கரையொதுங்கியமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்