வனஜீவராசிகள் திணைக்களத்தின் வழிகாட்டிகள் இன்றி தனியார் வாகனங்கள் யால தேசிய பூங்காவிற்குள் நுழைவதற்கு இனி அனுமதிக்கப்பட மாட்டாது என வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இந்த முடிவு தற்காலிகமானது என்றும் யால தேசிய பூங்காவிற்குள் சட்டவிரோதமாக சவாரி செய்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடியும் வரை குறித்த சட்டம் நடைமுறையில் இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.