இலங்கையின் முதல் பெண்மணி மைத்திரி ரணில் விக்கிரமசிங்க இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். யாழ் பல்கலைக்கு விஜயம் செய்த முதல் பெண்மணியான களனி பல்கலைக்கழக சிரேஸ்ர பேராசிரியர் மைத்திரியை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராசா வரவேற்றார்.
யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் ஆய்வு மாநாடொன்றில் கலந்து கொள்வதற்காகவே யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


