** உரம் போதிய அளவு கையிருப்பில் இருப்பதாக அரசாங்கம் அறிவிப்பு
பெரும்போக நெற் செய்கைக்காக 50 கிலோ கிராம் யூரியா மூடைகளை பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஏற்கனவே,எடுத்த தீர்மானத்தின்படி,50 கிலோ மூடை ஒன்றின் விலை 10 ஆயிரம் ரூபாய். விவசாயிகளுக்கு மாத்திரம் வழங்கப்பட இருக்கிறது.
நாடு முழுவதும் போதிய அளவு யூரியா கையிருப்பில் இருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய, விவசாயிகளுக்கு மாத்திரம் 50 கிலோ கிராம் முடையின் விலை பத்தாயிரம் ரூபாவுக்கு விநியோகிக்கப்பட இருக்கிறது.