திருத்தப்பணிகள்; கொழும்பில் இன்று இரவு 10 மணி முதல் நீர்வெட்டு

18

கொழும்பின் பல பகுதிகளில் இன்று (28) இரவு முதல் 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று இரவு 10.00 மணி முதல் நாளை (29) காலை 10.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படவுள்ளது. கொழும்பு 02, 03, 04, 05, 07, 08,10 ஆகிய பகுதிகளுக்கான நீர் விநியோகமே தடைப்படவுள்ளது.

அத்தியாவசிய திருத்தப் பணிகள் மற்றும் மேம்படுத்தலுக்காவே குடிநீர்விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Join Our WhatsApp Group