சர்வதேச 20 ஓவர் போட்டியில் தொடர்ச்சியாக 2 சதம் அடித்த 2-வது வீரர் – ரிலீ ரோசவ் சாதனை

17

சிட்னி: 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ரிலீ ரோசவ் சதத்தால் தென்ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. 2-வது ஆட்டத்தில் ஆடிய தென்ஆப்பிரிக்காவுக்கு இது முதலாவது வெற்றியாகும். ஜிம்பாப்வேக்கு எதிராக மோதிய ஆட்டம் மழையால் பாதியில் ரத்தானது.

109 ரன்கள் குவித்த தென்ஆப்பிரிக்க வீரர் ரிலீ ரோசவ் தனது முந்தைய இன்னிங்சில் இந்தூரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 100 ரன்கள் எடுத்திருந்தார். இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் போட்டியில் தொடர்ச்சியாக 2 சதம் அடித்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பு பிரான்ஸ் வீரர் கஸ்டவ் மெக்யோன் அடுத்தடுத்து இரு சதங்கள் அடித்திருந்தார்.

Join Our WhatsApp Group