இரட்டைக்குடியுரிமை உள்ளோரின் பாராளுமன்ற உறுப்புரிமையை நீக்குவதில் சட்டசிக்கல்

23

*சூடு பிடிக்கும் பாராளுமன்ற அரசியல்

*டயானா கமகே உறுப்புரிமையை இழப்பாரா?

அரசியலமைப்புக்கான 21 வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்பு பாராளுமன்ற அரசியலில் கடும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. 21 வது சட்டத்தின்படி,இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் பாராளுமன்றத்தில் உறுப்புரிமையை இழக்க நேரிடும்.

பத்துக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டை குடியுரிமையுடன் இருக்கிறார்கள் என்று இப்பொழுது தகவல்கள் கசிய தொடங்கியிருக்கின்றன.
இவர்களில், ராஜாங்க அமைச்சராக இருக்கின்ற டயானா கமகேயின் பெயர் இப்பொழுது ஊர்ஜிதம் ஆகி இருப்பதாகவே கூறப்படுகிறது.

திருமதி டயானா கமகே, பிரிட்டிஷ் குடியுரிமை கொண்டவர் என்பது தெரிய வந்திருப்பதாக பாராளுமன்றத்தில் கதைகள் கசிய விடப்பட்டிருக்கின்றன. கொழும்பில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் இதனை முழுமையாக மறுத்த டயானா கமகே, தான் ஒரு பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற பெண்மணி அல்ல, என தெரிவித்தார்.
இவரது விவகாரம் தொடர்பில், நீதிமன்றமும் சிஐடி பணிப்பாளரிடம் விளக்கம் கோரியுள்ளது. அடுத்த மாதம் பத்தாம் தேதிக்குள் முழுமையான அறிக்கையை நீதிமன்றில்,சிஐடி கொடுக்க வேண்டும்.

ஆனால் இந்த விடயம் சட்ட சிக்கலை உருவாக்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறுகின்றார்கள். ஒருவேளை, டயானா கமகே இரட்டை குடியுரிமை கொண்டவராக இருப்பது ஊர்ஜிதம் ஆனால், அவரைப் பாராளுமன்ற உறுப்பினர் இழக்க வேண்டி நேரிடும்.

உண்மையில், இருபதாவது திருத்தம் அமுலில் இருக்கின்ற பொழுது, திருமதி டயானா கமகே பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட் டு தேர்வு செய்யப்பட்டார். 21 ஆம் திருத்தம் இப்பொழுதுதான் பாராளுமன்றத்தில் அமல்படுத்தப்படுகிறது. இருபதாவது திருத்தச் சட்டத்தின் கீழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவரின் உறுப்புரிமையை, இடை நடுவில் நிறைவேற்றிய சட்டத்தால் ரத்து செய்ய முடியாது என்பது சட்ட நிபுணர்களின் வாதமாக இருக்கிறது. ஆகவே, திருமதி டயானா கமகே பாராளுமன்றத்தில் இருந்து விலக்கப்படுவாரானால், இது தொடர்பில் நீதிமன்றம் தான் தீர்மானம் எடுக்கும் நிலை ஏற்படும்.

Join Our WhatsApp Group