7 வருடங்களாக முடங்கிய விஜய்சேதுபதி படம் திரைக்கு வருகிறது

0
61

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த இடம் பொருள் ஏவல் படத்தின் படப்பிடிப்பு 2014-ம் ஆண்டிலேயே முடிவடைந்த நிலையில் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படம் வெளியாகாமல் முடங்கியது. இந்த படத்துக்கு பிறகு விஜய்சேதுபதி நடிப்பில் 35-க்கும் மேற்பட்ட படங்கள் திரைக்கு வந்துள்ளன.

ஆனால் பல தடவை முயற்சிகள் எடுத்தும் இடம் பொருள் ஏவல் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. படத்துக்கு எதிராக கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் தற்போது பிரச்சினைகள் அனைத்தும் பேசி தீர்க்கப்பட்டு படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடப்பதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.

7 வருடங்களாக முடங்கிய இடம் பொருள் ஏவல் படம் திரைக்கு வர இருப்பது விஜய்சேதுபதி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. ஏற்கனவே விஜய்சேதுதி, சீனுராமசாமி கூட்டணியில் வந்த தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, மாமனிதன் படங்கள் விருதுகளும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் பெற்றுள்ளதால் இடம் பொருள் ஏவல் படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்