“5 வயதுக்கு உட்பட்ட குழந்தை உடைய தாய்மார்கள் வெளிநாடு செல்ல முடியாது”

22

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபடுவதை தடுக்கும் சட்டங்கள் விரைவில் கொண்டுவரப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாடு செல்வதற்கு அனுமதிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் பிரச்சினைக்குரியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக பல சிறுவர்கள் பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாகவும் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Join Our WhatsApp Group