வயது முதிர்ந்து இயலாமை நிலையிலுள்ள முதியவர்களுக்கு உதவிகள் (படங்கள்)

0
38

(நூறுல் ஹுதா உமர்)

சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில்  சாய்ந்தமருது கிராம உத்தியோத்தர் பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி கொடுப்பனவு பெறுகின்ற தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களில் வயது முதிர்ந்து இயலாமை நிலையில் உள்ள முதியவர்களுக்கு கட்டில்களும்,  

விசேட தேவையுடைவர்களுக்கான சக்கர நாற்காலியும்,  வீட்டினை முழுமையாக பூர்த்தி செய்யாமல்  மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் உள்ள குடும்பத்துக்கு சீமெந்து பக்கெட்களும் சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல்.ஜஃபரின்  நெறிப்படுத்தலில் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் தலைமையில் பயனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று (26) வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில்,பிரதம அதிதியாக சமுர்த்தி மாவட்ட பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்றாஸ், அதிதிகளாக பிரதேச செயலக சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஏ.சி.எம். நஜீம், சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ். றிபாயா, சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எல்.யு.ஜூனைதா, சமுர்த்தி மகா சங்க உதவி முகாமையாளர் றியாத் ஏ. மஜீத், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி பிரதேச அமைப்பின் தலைவர், செயலாளர் என பலரும் கலந்துகொண்டனர். இவ்வேலைத்திட்டத்திற்கான நிதியினை சாய்ந்தமருது சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்