(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு நகர் கல்முனை வீதியிலுள்ள பலசரக்கு கடை ஒன்றில் சட்டவிரோதமாக எரிபொருளான டீசல் வியாபாரத்தில் ஈடுபட்ட கடை உரிமையாளரின் மகனை நேற்று புதன்கிழமை (26) இரவு கைது செய்துள்ளதுடன் 120 லீற்றர் டீசல், 80 தடைசெய்யப்ப்ட்ட சிகரெட்டுக்களை மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து போதைபொருள் மற்றும் மதுபான ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கஜநாயக்கா தலைமையில் பொலிஸ் சாஜன் ரி.கிருபா உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் சம்பவதினமான நேற்று இரவு பலசரக்கு கடையை சுற்றிவழைத்து சோதனயிட்டபோது அங்கு வியாபாரத்துக்கா வைத்திருந்த 120 லீற்றர் டீசல் மற்றும் 80 சிகரெட்டுக்களை மீட்டதுடன் கடை உரிமையாளரின் மகனை கைது செய்தனர் இதில் கைது செய்யப்பட்டவரை மட்டக்களப்பு நீதிமன்றில் ஈஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.