புத்தளம் – ஆராய்ச்சி கட்டுவையில் மஹிந்த தலைமையில் மொட்டுக்கட்சி கூட்டம்

0
15

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்றாவது கட்சிக் கூட்டம்
‘சாம்பலில் இருந்து எழுவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புத்தளம் ஆரச்சிக்கட்டு பகுதியில் தற்போது இடம்பெற்றது. மக்கள் போராட்டத்தை தொடர்ந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் மாற்றமடைந்ததன் பின், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் முதலாவது கட்சி கூட்டம் கடந்த 8ஆம் திகதி ‘களுத்துறையில் இருந்து மீண்டும் ஒன்றிணைவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

பொதுஜன பெரமுனவின் இரண்டாவது கூட்டம் கடந்த 16ஆம் திகதி நாவலப்பிட்டி நகரில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் ஏற்பாட்டில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றிருந்தது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்