முகமூடியுடன் ஹெல்மெட் அணிந்து வீடுகளுகளில் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த பிரபல கொள்ளைக்காரன் “வத்தளை சூட்டி” கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (26) பிற்பகல் களுத்துறை குற்றப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வத்தளை, மஹேன பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறை வலான பிரதேசத்தில் வீடொன்றில் குதித்து பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி சுமார் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகையை கொள்ளையிட்டு தப்பிச் சென்றதாக முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.