நிலக்கரி வந்தடைந்தது: நுரைச்சோலையில் தங்கு தடையின்றி
மின் உற்பத்தி

0
30

60,000 மெட்ரிக் தொன் நிலக்கரி நாட்டை வந்தடைந்துள்ளதாக  லங்கா நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், குறித்த நிலக்கரியை இறக்கும் பணி நேற்று (26) ஆரம்பமாகியதாக லங்கா நிலக்கரி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
அத்தோடு மேலும் 4 நிலக்கரி கப்பல்கள் டிசம்பர் 4 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்கு வரவுள்ளன.

புதிய ஏற்றுமதியின் மூலம் நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தில் மின்சார உற்பத்தியை தடையின்றி மேற்கொள்ள முடியும் என லங்கா நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்