தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு பொலிஸாருக்கு காலக்கெடு

0
18

கடந்த காலங்களில் இடம்பெற்ற போராட்டங்களை கட்டுப்படுத்த பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர் புகை குண்டுகள் தொடர்பான தகவல்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுமாறு பொலிஸாருக்கு தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

கண்ணீர்ப்புகை கொள்வனவு தொடர்பான ஆவணங்கள், தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கைகள், ஆர்ப்பாட்டங்களில் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டமை மற்றும் காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பிரயோகிக்கப்பட்டுள்ளதா என்பன தொடர்பான ஆவணங்கள், நவம்பர் 14ஆம் திகதிக்கு முன்னர் உரிய தகவல்களை வெளியிடத் தவறினால் பொலிஸார் மீது.

பொதுமக்கள்.நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலரும் ஊடகவியலாளருமான தரிந்து ஜெயவர்தன அனுப்பிய தகவல் கோரிய மனு தொடர்பான மேன்முறையீட்டின் முடிவை அறிவிக்கும் போதே தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு இவ்வாறு பரிந்துரை செய்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்