டக்ளஸ் மீது தாக்குதல் நடத்திய இருவருக்கும் ஒத்திவைக்கப்பட்ட
22 மாத கடூழிய சிறை

34

களுத்துறை சிறைச்சாலையில் வைத்து, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு 15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 22 மாத கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, குறித்த தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க நேற்றைய தினம் தீர்ப்பளித்தார்.

\குற்றவாளிகள் இருவருக்கும் தலா 40,000 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, பிரதிவாதிகள் இருவரும் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தலா ஒரு இலட்சம் வீதம் நட்டஈடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.

1998 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி களுத்துறை சிறைச்சாலையில் வைத்து டக்ளஸ் தேவானந்தாவை தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தாக்குதல் நடத்திய சிறீஸ்கந்த ராஜா, நிமலன் ரோகான் ஆகிய இருவரின் சார்பில், சிரேஷ்ட சட்டத்தரணி கே. எஸ். ரத்தினவேல் ஆஜராகி இருந்தார்.

குற்றத்தை ஒப்புக்கொண்ட இருவரும் ஆறு வருடங்களுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து விட்டனர் என்று நீதிமன்றத்தில் சட்டத்தரணி ரத்தினவேல் விளக்கினார்.
குற்றம் சாட்டப்பட்டிருந்த இருவரினதும் நடத்தையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என இதன்போது நீதிபதி நவரத்தின மாறசிங்க தெரிவித்தார். தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து, நட்ட ஈடு வழங்குவதற்கு ஆறு மாத கால அவகாசம் தருமாறு, சட்டத்தரணி ரத்தினவேல் நீதிமன்றிடம் கோரினார். அதனை மீனவன் முட்டாளாக நிராகரித்தார். நேற்றைய விசாரணையின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் நீதிமன்றில் ஆஜராகி இருந்தார் .

Join Our WhatsApp Group