கொழும்பு நாரஹேன்பிட்டியிலுள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவு கட்டிடத்துக்கு முன்பாக இன்று மதியம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அனைத்துப் பல்கலைகழக மாணவ ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே,சிறிதம்ம தேரார் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ய வலிறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது, தேரருக்கு டெங்கு அறிகுறி தென்படுவதாகவும் முறையான சிகிச்சை இல்லை என்றும் சிறிதம்ப தேரரின் சகோதரி தெரிவித்தார்.
பயங்கரவாதா தடை சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறிதம்ப தேர ருக்கு உடல் நிலை மோசமடைந்து வரும் நிலையில் பிணை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. சரியான உணவு மருத்துவ வசதி இல்லை. இது தொடர்ந்தாள் அவரின் உயிருக்கு யார் பொறுப்பு. அப்படி எதாவது ஒன்று நடக்குமானால் முழு பொறுப்பும் ரணிலுக்குத்தான். அதற்கு முன்னர் அவரை விடுதலை செய்ய வேண்டும். இல்லை என்றால் பாரிய பின் விளைவுகளை ரணில் அரசு சந்திக்க நேரிடும் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்