காத்தான்குடி, ஏறாவூர்: போதை பொருள், கஞ்சா செடிகளுடன் இரு பெண்கள் உட்பட 4 பேர் கைது 

43

(கனகராசா சரவணன்)

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் ஆகிய இரு பொலிஸ் பிரிவுகளில் 3 சம்பவங்களில்  ஜஸ்போதைப்பொருள், ஹரோயின் மற்றும் கஞ்சா செடியுடன் இரு பெண்கள் உட்பட 4 பேரை நேற்று புதன்கிழமை (26) கைது செய்துள்ளதாக அந்தந்த பொலிஸ் நிலைய பொலிசார் தெரிவித்தனர்.

மாவட்ட குற்ற விசாரணை பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று மாலை மாவட்ட குற்ற விசாரணைப்  பிரிவினர்  ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள புன்னைக்குடா பகுதியில் அமைந்துள்ள இரு வீடுகளை முற்றுகையிட்டனர் இதன்போது வீடுகளில் உள்ள கிணற்று பகுதியில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த இரு பெண்களை கைது செய்ததுடன் இரு கஞ்சா செடிகளை மீட்டனர்.

அதனை தொடர்ந்து ஏறாவூர் பகுதியில் ஐஸ்போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவரை ஆயிரம் மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்து ஏறாவூர் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

இதேவேளை, காத்தான்குடி பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் 80 மில்லிக்கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் நேற்று இரவு ஒருவரை கைது செய்தனர். வெவ்வேறு 3 சம்பங்களில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

Join Our WhatsApp Group