ஐபோன் மாடல்களில் ‘டைப் சி’ சார்ஜிங் போர்ட் இடம்பெற வாய்ப்பு உள்ளதா?- ஆப்பிள் பிரதிநிதி தகவல்

42

வரும் 2024 முதல் அனைத்து டிஜிட்டல் டிவைஸ்களும் ‘டைப் சி’ சார்ஜிங் போர்ட்களை கொண்டிருக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஐபோன் மாடல்களில் லைட்னிங் கேபிளுக்கு மாற்றாக ‘டைப் சி’ சார்ஜிங் போர்ட் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இது எப்போது நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்படவில்லை.

இதனை ஆப்பிள் மார்க்கெட்டிங் தலைவர் கிரெக் ஜோஸ்வியாக் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு முன்னர் ஆப்பிள் நிறுவனத்துக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணைய தரப்புக்கும் சார்ஜர் போர்ட் விவகாரத்தில் உள்ள கருத்து முரண் இருந்தது குறித்தும் அவர் பேசி இருந்தார். அப்போது ஆப்பிள் சாதனங்களில் மைக்ரோ யூஎஸ்பி வேண்டும் என ஆணையத்தின் தரப்பில் சொல்லப்பட்டது வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அப்போது அது நடந்திருந்தால் டைப் சி போர்டுக்கு மாறி இருக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேக், ஐபேட், அக்சசரிஸ் போன்றவை பழைய வகையிலான போர்ட்டில் இருந்து டைப் சி-க்கு மாற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கம்யூட்டிங் தளத்தின் எதிர்காலம் மெட்டாவர்ஸ் எனும் விர்ச்சுவல் உலக ஐடியாவை அவர் புறந்தள்ளி உள்ளார். ஆப்பிள் போன்களுடன் தற்போது சார்ஜர் வருவதில்லை.

இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் அனைத்து சாதானங்களிலும் டைப் சி சார்ஜிங் போர்ட் வேண்டும் என அரசு விரும்புவதாக கடந்த ஆகஸ்ட் வாக்கில் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group