அரசின் தேசிய வேலைத்திட்டங்களுடன் விகாரைகள் உட்பட சகல மதத்தலங்களும் ஒன்றிணைதல் வேண்டும் – பிரதமர்

66

எமது நாடு உணவில் தன்னிறைவை அடைவதற்காக அரசு முன்னெடுக்கும் தேசிய வேலைத்திட்டத்திற்கு கிராமத்திலுள்ள விகாரைகள் உள்ளிட்ட அனைத்து மதத்தலங்களும் ஒன்றிணைதல் மிக முக்கியமாகும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

நேற்று மாதிவெல, கேதுமதீ விகாரை மற்றும் பொல்வத்த ஸ்ரீ சத்தர்மாராம விகாரையில் இடம்பெற்ற கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
கிராமத்திலுள்ள விகாரைகள் உள்ளிட்ட அனைத்து மதத்தலங்களும் பங்கேற்கின்ற உணவுப் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டமானது, ஜனாதிபதியின் தலைமையில் தற்போது மிகவும் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதற்காக ஒவ்வொரு கிராமங்களுக்கும் அரச உத்தயோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், மக்கள் பிரதிநிதிகளைக்கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

உணவுக்காக மட்டுமல்லாமல் ஏற்றுமதியில் சேர்க்கப்படக்கூடிய உணவுகள் தொடர்பிலும் ஒவ்வொரு மாவட்டமும் கவனம் செலுத்துதல் வேண்டும். உதாரணமாக, புத்தளம் மாவட்டம் தற்போது பருத்தி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளதுடன், அடுத்த எட்டு மாதங்களில் பருத்தி அறுவடை செய்யப்பட்டு, ஏற்றுமதி செய்யப்பட எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த திட்டமானது ஏனைய மாவட்டங்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்வதுடன் முன்னைய உற்பத்தியை விட அதிகளவான விளைச்சலைப் பெறத்தக்க பயிர்ச்செய்கை போன்று, ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பயிர்ச்செய்கை தொடர்பிலும், நாம் கவனம் செலுத்துதல் வேண்டும்.

கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டமானது, தற்போது பதினான்காயிரம் கிராமங்களில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றதுடன், இதன் ஊடாக அரசாங்கமானது, தற்போது நிலவும் நிதிப் பற்றாக்குறைக்கு தீர்வு காண்பதற்கும், உணவில் தன்னிறைவு அடைவதற்கும் முயலுகின்றது என பிரதமர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்விற்கு, மாதிவெல கேதுமதி விஹாராதிபதி வணக்கத்திற்குரிய கலாநிதி நாயிம்பல தம்மதஸ்சி நாயக்க தேரோ, பொல்வத்த ஸ்ரீ சத்தர்மாராம விகாராதிகாரி பூஜ்ய அச்சித்தாவே யதிரதன தேரோ உள்ளிட்ட மதகுருமார்கள், பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்த்தன, கொழும்பு மாவட்டச் செயலாளர் பிரதீப் யசரத்ன, மகரகமை பிதேச செயலாளர் தில்ருக்சி வல்பொல, மகரகமை நகரபிதா டிராஜ் லக்ருவன், மகரமை நகரசபை உறுப்பினர்களான பிரதீப் லியனகே, காந்தி கொடிகார, ரசிகாn குணசிங்க உள்ளிட்ட பிரதேசவாசிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Join Our WhatsApp Group