மொட்டு கட்சியின் திரையிலிருந்து நீக்கப்பட்ட கோட்டா, பசில்!

0
24

பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் மாநாடுகளுக்கு இதுவரை பயன்படுத்தப்பட்ட பின்னணி திரையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக பின் திரையில் தாமரை மொட்டு சின்னம் மாறி முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரின் படங்கள் இடம் பெற்றிருந்தன.

ஆனால் இப்போது செய்யப்பட்ட புதிய மாற்றத்தின்படி அவர்களுக்குப் பதிலாக மகிந்த ராஜபக்சவும் மொட்டுவும் மட்டும் மாறி மாறிக் காட்டப்பட்டுள்ளனர்.
இதன்படி,பசில் ராஜபக்ச மற்றும் கோட்டாபாய ராஜபக்ச ஆகியோர் திரையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
( நன்றி -உதயம் )

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்