மூன்று சட்டமூலங்களை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

31

பாராளுமன்றத்தில் கடந்த 19ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட  அற்றோணித் தத்துவம் (திருத்தச்) சட்டமூலம், ஆவணங்களைப் பதிவு செய்தல் (திருத்தச்) சட்டமூலம், விருப்பாவணங்கள் (திருத்தச்) சட்டமூலம், மோசடிகளைத் தடுத்தல் (திருத்தச்) சட்டமூலம் என்பவற்றுக்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு நேற்று (25) சான்றுரைப் படுத்தினார்.
 
இதற்கமைய மேலே குறிப்பிடப்பட்ட மூன்று சட்டமூலங்களும் 2022ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க அற்றோணித் தத்துவம் (திருத்தச்) சட்டம், 2022ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க விருப்பாவணங்கள் (திருத்தச்) சட்டமூலம், 2022ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க மோசடிகளைத் தடுத்தல் (திருத்தச்) சட்டமாக 2022 ஒக்டோபர் 25ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

Join Our WhatsApp Group