மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க IMF அழுத்தம்….?

19

சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தலின் படி மின்சார கட்டணத்தை மீண்டும் 30 வீதத்தால் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 15ஆம் திகதி முதல், மின் கட்டணத்துக்காக, சமூக பாதுகாப்பு வரியாக, 2.56 ரூபா வசூலிக்கப்படுவதாக அதன் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp Group