2022 ஒக்டோபர் 01 முதல் மின்சார கட்டணத்துடன் 2.5% சமூகப் பாதுகாப்பு உதவுதொகை வரி சேர்க்கப்படுவதாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் நிறைவேற்றப்பட்ட சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி சட்டத்தின் கீழ் இலங்கை மின்சார சபையின் மின்சார விநியோகம் உள்ளதால், வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட இலங்கை மின்சார சபையிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்யும் அனைவரிடமிருந்து, 2022 ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் இலங்கை மின்சார சபை மேற்படி வரியை அறவிடவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி எவ்வாறு மின்சார கட்டணத்தை பாதிக்கிறது என்பது தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தலிலேயே அவர் இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார்.