சிறுவர், இளைஞர் பிரச்சினைகளை கையாள வடக்கில் அவசர உதவி இலக்கம் அறிமுகம்

22

சிறுவர் மற்றும் இளைஞர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு காணும் நோக்கில் வடமாகாண சபை விசேட அவசர உதவி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி 070 666 66 77 என்ற இந்த இலக்கம் நேற்று (25) முதல் செயற்படும் என வடமாகாண சபை அறிவித்துள்ளது. உணவு மற்றும் ஊட்டச்சத்து, கல்வி, பாதுகாப்பு, உளவியல் மற்றும் தொழில்சார் தேவைகள் மற்றும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான வழிகாட்டுதல்கள் தொடர்பான பதில்களை வழங்க இந்த தொலைபேசி இணைப்பு பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்கள் உட்பட பெண்கள் மற்றும் சிறுவர்கள் தங்களின் நல்ல திட்டங்களையும் ஆலோசனைகளையும் முன்வைக்க வாய்ப்பு வழங்கப்படும் எனவும் வடமாகாண சபை தெரிவித்துள்ளது.

Join Our WhatsApp Group