முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும். ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம் என்னும் ஆறு பகைவர்களை முருகன் அழித்தார்.
முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.
கந்தசஷ;டி விரதம் இருக்கும் முறை
👉🏻கந்தசஷ்டி ஆரம்பம் முதல் இறுதி வரை விடியற்காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் நீராட வேண்டும்.
👉🏻காலையிலும், மாலையிலும் குளித்து விட்டு வீட்டிலுள்ள சுவாமிக்கு பூக்களை வைத்து அகல் விளக்கு ஏற்ற வேண்டும்.
👉🏻முருகன் கோவில்களுக்கு சென்று விளக்கேற்றி அர்ச்சனை வழிபாடு செய்ய வேண்டும்.
👉🏻விரதம் மேற்கொள்ளும் நாளில், முருகனை மனதில் நினைத்துக் கொண்டு கந்தசஷ;டி கவசம், கந்த குரு கவசம், சண்முக கவசம் போன்ற கவச நூல்களை பாட வேண்டும்.
👉🏻திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தரது அனுபூதி போன்ற நூல்களையும் ஓதலாம்.
👉🏻இந்த விரதத்தை அன்ன ஆகாரமின்றி ஆறு நாட்களும் கடைபிடிக்கலாம். இதை செய்ய முடியாதவர்கள் கந்தசஷ்டி அன்று மட்டும் முழு விரதம் இருந்து கந்தனை வழிபடலாம்.
👉🏻பகலில் பழம், பால் மட்டுமே உண்ண வேண்டும். உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் எளிய உணவாக காலையில் சிற்றுண்டி அருந்தலாம்.
👉🏻காலை முதல் மாலை வரை குறைந்த அளவு பானம் மட்டும் அருந்தி மாலையில் முருகன் கோவிலுக்கு சென்று வணங்கி விட்டு விரதத்தை நிறைவு செய்யலாம் அல்லது இரவு பச்சரிசி சாதம் சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.
👉🏻மலைக்கோவில்களில் மலையை வலம் வந்தால் மிகுந்த புண்ணியம் உண்டாகும். கோவில்களில் தங்கி விரதமிருப்பது நல்லது.
👉🏻 கோவில்களில் தங்கி விரதம் இருக்க முடியாதவர்கள் அவரவர் இருப்பிடத்திலேயே விரதம் இருக்கலாம்.
👉🏻இவ்வாறு ஆறு நாட்கள் தொடர்ந்து விரதம் இருந்து ஆறாவது நாளில் சூரசம்hரம் என்னும் நிகழ்ச்சியை முருகன் கோவிலில் தரிசனம் செய்து விரதத்தை முடிக்க வேண்டும்.
👉🏻 கந்தசஷ;டி விரதத்தை அவரவர் உடல்நிலைகளுக்கு தகுந்தவாறு அனுசரிக்க வேண்டும்.
🌟கந்தசஷ்டி விரத பலன்கள் :
👉🏻 கந்தசஷ;டி விரதமிருந்து முருகனை வழிபட்டால்,
👉🏻வீட்டின் கஷ்டங்கள் நீங்கி இன்பம் செழிக்கும்.
👉🏻குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும்.
👉🏻 வேலைவாய்ப்பு கிடைக்கும்.
👉🏻கடன் தொல்லை நீங்கும்.