இங்கிலாந்து அணியை ஐந்து ஓட்டங்களால் வீழ்த்திய அயர்லாந்து!

30

இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் அயர்லாந்து அணி ட்க்வர்த் லூயில் முறையில் 5 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி, 19.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 157 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனையடுத்து, 158 என்ற வெற்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 14.3 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 105 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டது.
இதனையடுத்து, அயர்லாந்து அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Join Our WhatsApp Group