பதிக்கி வைக்கப்பட்டுள்ள இலங்கையரின் டொலர்களை கொண்டு வர வேண்டும்- வாசுதேவ

0
47

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ‘முதலாளி’ சர்வதேச நாணய நிதியம் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அத்துடன், நிதியத்தின் அறிவுறுத்தல்கள் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர் சர்வதேச நாணய நிதியத்தின் சார்பில் உரிய அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்துவதாகத் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கை டொலர்களை நாட்டிற்குள் கொண்டுவர வேண்டுமென நாணயக்கார சுட்டிக்காட்டினார்.

எனினும் ஆட்சியாளர்கள் அதனைச் செய்வதில்லை எனவும் அவர்களின் ‘பெரியவர்களுக்கு’ உரிய உரிமைகள் இருப்பதே அதற்குக் காரணம் எனவும் எம்.பி மேலும் சுட்டிக்காட்டினார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்