தீபாவளி சிறப்பு பூஜை வழிபாடு ( படங்கள்)

18

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, பம்பலப்பிட்டி பழைய கதிரேசன் (வஜிரா பிள்ளையார்) ஆலயம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த தீபாவளி பண்டிகை விசேஷ பூஜை வைபவம் ஆலயத்தில் நேற்றுக்காலை. சு. ப. இராஜேந்திரன் செட்டியார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, மற்றும் செயளாலர் சோமரட்ண பத்திரன, இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிர்வாக பணிப்பாளர் யதுகுலசிங் அனிருத்தனன். முன்னாள் பிரதமரின் இந்துமத இணைப்பாளர் சிவஸ்ரீ பாபுசர்மா அ. இ. இ. மா. மன்ற பொதுச்செயலாளர் கந்தசாமி, கலாகீர்த்தி உடுவை எஸ். தில்லைநடராசா ஆகியோர் கலந்துகொண்டனர். சிவஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் தலைமையில் நடைபெற்ற பூஜையை அடுத்து அதிதிகளுக்கான பழப்பிரசாதம் , பொன்னாடை  வழங்கி கௌரவிக்கப்பட்ட பின் அதிதிகள் வீதி வலம் வருவதையும் காணலாம்.

Join Our WhatsApp Group