இந்து பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடும் தீபாவளிப் பண்டிகைக்கான கொண்டாட்ட நிகழ்வொன்று இந்து சமய சம்பிரதாயங்களுக்கு முன்னுரிமை அளித்த வண்ணம் நேற்று (24) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஒரு நாடு என்ற வகையில், நம் நாட்டு மக்கள் தற்போது அனுபவித்து வரும் நெருக்கடியிலிருந்து விடுபட தீபாவளியன்று அதிஷ்டானம் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை நினைவு கூர்ந்த சஜித் பிரேமதாஸ,மகிழ்ச்சியான எதிர்காலமொன்று உதயமாக தீபாவளி தினத்தன்று பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையர்களின் வாழ்விலிருந்து இருள் நீங்கி,பட்டினி,வேதனை போலவே அசௌகரியங்களால் வாடும் அனைத்து மக்களின் வாழ்விலிருந்தும் கண்ணீர் நீங்கி,தீபாவளி நாளில் தீய கெடுதிகள் அழிந்தது போலவே தற்கால கெடுதிகளும் நீங்கி நலவுகள் மோலோங்க பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வலையொளி இணைப்பு-