உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 61.22 கோடியாக உயர்வு

78

சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா வைரசானது கண்டறியப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியாக, தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

எனினும், மறுபுறம் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 கோடியே 28 லட்சத்து 94 ஆயிரத்து 301 என்பதில் இருந்து 63 கோடியே 32 லட்சத்து 23 ஆயிரத்து 370 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிப்படைந்தவர்களில் 1 கோடியே 43 லட்சத்து 88 ஆயிரத்து 758 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 61 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரத்து 580 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 65 லட்சத்து 84 ஆயிரத்து 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

Join Our WhatsApp Group