இலங்கை அணியை 7 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது அவுஸ்திரேலியா

30

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கான T20 உலகக்கிண்ணத் தொடரின் இன்றைய போட்டியில் 16.3 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களால் இலங்கையை வெற்றிக்கொண்டது.
லங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கான T20 உலகக்கிண்ணத் தொடரின் இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா அணி வெற்றிப் பெற்ற நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 157 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இதையடுத்து 158 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி இலக்குடன் அவுஸ்திரேலிய அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது. இதன்போது நான்காவது ஓவரை வீசிய மகேஸ் தீக்ஷன தனது முதலாவது பந்திலேலேயே டேவிட் வார்னரின் மிக முக்கியமான விக்கெட்டை கைப்பற்றினார்.

தனஞ்சய டி சில்வாவின் 7 ஆவது ஓவரில் மிட்செல் மார்ஷின் இரண்டு பிடியெடுப்புக்களை  இலங்கை வீரர்கள் கைநழுவவிட்டனர். இதன் போது .இலங்கை அணியின் 8 ஆவது ஓவரில் அவுஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் T20 உலகக் கிண்ணத் தொடரின் தனது ஆயிரமாவது ஓட்டத்தை பதிவு செய்தார்.

தனஞ்சய டி சில்வாவின் 9 ஆவது ஓவரில் மிட்செல் மார்ஷ் பானுக்க ராஜபக்ஷவிடம் பிடிகொடுத்து ஆட்டிமிழந்து செல்ல கிளென் மேக்ஸ்வெல் களமிறங்கினார். பத்து ஓவர்கள் நிறைவில் அவுஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 85 ஓட்டங்களைப் பெற்றது.

கருனாரட்னவின் 13 ஆவது ஓவரின் முதல் பந்தில் கிளென் மேக்ஸ்வெலின் பிடியெடுப்பை தவறவிட்ட பண்டார இரண்டாவது பந்தில் அவரிடமே கிளென் மேக்ஸ்வெல் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இவரையடுத்து ஸ்டொய்னிஸ் களமிறங்கினார்.

16 ஓவரில் 16 பந்துகளுக்கு மார்கஸ் ஸ்டொய்னிஸ் மிக விரைவான 50 ஓட்டங்களைப் பெற்று T20 தொடரின் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
 

Join Our WhatsApp Group