இன்று சூரிய கிரகணம்

81

இன்று நிகழவுள்ள சூரிய கிரகணம் 1 மணி நேரம் 45 நிமிடங்கள் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பகுதியளவு சூரியகிரகணம் இன்று ஏற்பட உள்ளது. சூரியகிரகணம் மாலை 5.27மணியளவில் தொடங்கி, 6.27 மணி வரையில் நிகழவுள்ளது.

சூரிய கிரகணத்தை யாழ்ப்பாணத்தில் மிகத்தௌிவாக காண முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளர், பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டார்.

இன்று(25) மாலை 5.27 மணியளவில் சூரிய கிரகணத்தை பார்வையிட முடியும் இதனை சுமார் 22 செக்கன்கள் வெற்றுக் கண்களால் பார்வையிட முடியும் எனவும் கண்களுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார்.(Trueceylon)

இந்த கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களால் பாா்க்கக்கூடாது எனவும், சூரிய வெளிச்சத்தைக் குறைக்கும் தன்மையுடைய சிறப்பு கண்ணாடிகள் அணிந்தும், சூரியனின் பிம்பத்தை ஒரு வெண்திரையில் விழச் செய்தும் பாா்க்கலாம் எனவும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Join Our WhatsApp Group