மலையகமெங்கும் மகிழ்ச்சியான தீபாவளி : மத வழிபாடுகளுடன் கொண்டாட்டம் ( படங்கள்)

0
12

(க.கிஷாந்தன்)
 
மலையக மக்கள் சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தீபாவளி பண்டிகையை 24.10.2022 இன்று வெகுவிமர்சியாக கொண்டாடினார்கள்.
 
அட்டன் பகுதியில் அட்டன் அருள் மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதான குருக்கள் ஸ்ரீ பூர்ணசந்திராநந்த குருக்கள் தலைமையில் தீபாவளி விசேட சமய வழிபாடுகள் நடைபெற்றன.
 
விசேட பூஜை வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் உட்பட பொது மக்களும் இவ்வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். அத்தோடு மலையகத்தில் பல ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
 
இந்து மக்கள் தங்களது பண்டிகையை புத்தாடைகள் அணிந்து சமய வழிபாடுகளில் ஈடுப்பட்டு, உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்துகளை தெரிவித்து, வீடுகளில் சிறப்பாக கொண்டாடினர்.


 

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்