கிழக்காபிரிக்க நாடுகளின் எண்ணெய் விநியோக ஒப்பந்தத்துக்கு கண்டனம்

41

தன்ஸானியா,உகண்டா ஆகிய நாடுகள் குழாயூடான எண்ணெய் விநியோக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. இதன் பிரகாரம்,1440 கிலோ மீற்றர் தூரத்துக்கு குழாயூடாக எண்ணெய் விநியோகிக்க ப்படவுள்ளது.உலகின் மிக நீளமான குழாய் விநியோகத்தில், இதுவுமொன்று. மட்டுமன்றி,எண்ணெய் உற்பத்தியில் இப்பிராந்தியம் மூன்றாமிடத்திலும் உள்ளது.இப்பகுதியில் 6,5 billion பெரல் எண்ணெயை சேமிக்க முடியும்.

2006 இல், இந்த எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டது.

கிழக்கு ஆபிரிக்க நாடுகள் செய்துள்ள இந்த, குழாயூடான எண்ணெய் விநியோக ஒப்பந்தத்தை ஐக்கிய நாடுகள் வலுசக்தி முகவர் அமைப்பு கண்டித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தால் முன்னெடுக்கப்படவுள்ள வேலைகளால் சுற்றாடலுக்கு சேதம் ஏற்படுமெனவும் ,பாரிய அகழ்வுப்பணிகள் நிலத்தின் கட்டுமானத்தை சிதைத்து நிலச்சரிவுகளை ஏற்படுத்தும் என்றும் இந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

நவம்பர் மாத நடுப்பகுதியில், எகிப்தில் “கோப்27” காலநிலை மாநாடு நடைபெறவுள்ளது.

உலக சுற்றாடலை பாதுகாக்கும் “பரிஸ் காலநிலை” தீர்மானத்துக்கு அமைய, மனிதன் வாழும் பூமியை பாதுகாக்கும் நோக்கில் இம்மாநாடு நடைபெறுகிறது. இந்நிலையில்,இவ்வாறான ஒப்பந்தம் கேலிக்கூத்தாக உள்ளதாகவும் ஐ,நா வலுசக்தி முகவர் நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Join Our WhatsApp Group