தற்போது அமெரிக்கா சென்றுள்ள பொதுஜன பொரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச எதிர்பாராதவிதமாக இலங்கைக்கு விஜயம் செய்ய தீர்மானித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கைவிட்ட பசில் ராஜபக்ச அமெரிக்கா சென்றிருந்தார்.
அத்துடன், அவர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கைக்கு வரவிருந்தார்.
எனினும், 22 ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், குடும்பச் சூழ்நிலை காரணமாக பசில் ராஜபக்ச இம்மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறியமுடிகிறது.
அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பான வாக்கெடுப்பில் முட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் எல்லாம் சட்டமூலத்தை ஆதரித்து வாக்களித்தனர்.
கட்சியின் தலைவராக இருக்கின்ற மஹிந்த ராஜபக்ஷ, நழுவல் போக்கை கடைபிடித்து இருந்தாலும், அவருடைய மகனான நாமல் ராஜபக்ஷ, மற்றும் அவரது மூத்த சகோதரரான சமல் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷவின் மூத்த மகனான சசிந்திர ராஜபக்ஷ ஆகியோர் 22 ஆவது திருத்தத்தை ஆதரித்து வாக்களித்திருந்தனர்.
இந்த நிலைப்பாடு, மொட்டுக் கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷவை நிலைகுலையைச் செய்துள்ளது.
ராஜபக்ஷ குடும்பத்துக்குள் ஏற்பட்டிருக்கின்ற இந்த பிளவு நிலை, அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்த வாக்களிப்பில் வெளிப்படையாகவே தெரியவந்தது.