மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் 10 வயது பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குளியாபிட்டிய-கிரிமெடியாவ பகுதியில் நேற்று இந்த விபத்து நடந்துள்ளது.
துவிச்சக்கர வண்டியுடன் மோதிய மோட்டார் சைக்கிள் சாரதி வீதியில் ஒழுங்கற்ற முறையில் பயணித்து வந்ததாக, துவிச்சக்கரவண்டியில் பின்னால் அமர்ந்து வந்த மாணவி தெரிவித்துள்ளார். துவிச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய சந்தர்ப்பத்தில் தான் முன்கூட்டியே கீழே பாய்ந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
முகப்பு Uncategorized மோட்டார் சைக்கிள் துணிச்சக்கர வண்டியை மோதி தள்ளியது :10 வயது மாணவி உயிரிழப்பு(VIDEO)